டம்பளர் திருடிய பொலிசார்கள் ...சிசிடிவியில் சிக்கிய காட்சி

Report Print Gokulan Gokulan in இந்தியா

புதுக்கோட்டையில் பொலிசார்கள் டம்பளர் திருடிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது

புதுக்கோட்டையில் இளைஞர் தன்னார்வலர்கள் கோடை காலம் காரணமாக இலவச குடிநீர்குழாய் அமைத்துள்ளனர். குழாயில் தண்ணீர் பிடித்து குடிக்க வசதியாக டம்பளர் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தினமும் இரவு டம்பளரை யாரோ திருடிச்சென்றுள்ளனர். குற்றவாளிகளை கண்டறிய அக்குழுவினர் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.

மறுநாளும் டம்பளரை யாரோ திருடிச்சென்றுள்ளனர். இந்நிலையில் சிசிடிவி காட்சியை பார்த்து அந்த அமைப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த வீடியோவில் பைக்கில் வரும் இரண்டு பொலிசார் டம்பளரை திருடி செல்கின்றனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அறிந்த பொலிஸ் உயர்அதிகாரிகள் டம்பளரை திருடிய காவலரை பணியிடை மாற்றம் செய்துள்ளனர்.

மேலும், பைக் ஓட்டிவந்த பொலிசாரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்