16 வயதில் காதல்: சினிமா பாணியில் துப்பட்டாவில் கட்டிக்கொண்டு காதல் ஜோடி எடுத்த சோக முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கடலூர் மாவட்டத்தில் இளம் வயது காதல் ஜோடி தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் உடலை துப்பாட்டாவில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான அபிராமியும், 18 வயதான சிவரஞ்சனும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி அப்பகுதியை சேர்ந்த வேந்தன் என்பவரது விளைநிலம் பகுதியில் இருந்து கிணற்றுக்கு அருகில் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பார்த்த வேந்தன் அவர்களை விரட்டியுள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவரையும் பெற்றோர் தேடி வந்த நிலையில், தனது விளைநிலத்தில் இவர்களை கடைசியாக பார்த்த வேந்தன், மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது காதல் ஜோடியின் செருப்புகள் இருந்துள்ளன.

உடனே அவர் பொலிசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரியவந்ததையடுத்து அவர்களை மீட்டனர்.

இதையடுத்து பொலிசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.புன்னகை மன்னன் படத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த இளம் காதலர்களின் தற்கொலை முடிவு இருந்துள்ளது. இவர்களின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்