போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை காலணியால் சரமாரியாக அடித்த பெண்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர், போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை சரமாரியாக தனது காலணியால் அடித்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரைச் சேர்ந்த ராக்கி வர்மா என்பவரின் வீட்டுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டு நபர் ஒருவர் சென்றுள்ளார். அவர், வீட்டில் இருந்த ராக்கி வர்மாவிடம் அவரது கணவர் லஞ்சம் பெற்றதாகவும், இதை மறைக்க 50 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் விட்டுவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராக்கி வர்மா தனது தோழிகளின் உதவியுடன் குறித்த நபர் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்பதை அறிந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ராக்கி வர்மா தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர், தனது தோழிகளின் உதவியுடன் குறித்த நபரை பிடித்து தாக்கினார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண், தனது காலணியால் சரமாரியாக அந்த நபரை அடித்தார்.

மேலும், அங்கு வந்த அவரது கணவரும் பொலிசாரின் முன்னிலையிலேயே போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை கடுமையாக தாக்கினார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ராக்கி வர்மாவின் உறவினரே இவ்வாறு போலி அதிகாரியாக நடித்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அந்த பெண் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers