உச்சநீதிமன்ற நீதிபதி பாலியல் புகார் விவகாரம்... ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பாடகி சின்மயி மனு

Report Print Raju Raju in இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு பாடகி சின்மயி பொலிசில் புகார் மனு அளித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்து, 22 நீதிபதிகளுக்கு பிரமாண பத்திரத்தை அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த, ரஞ்சன் கோகாய், நீதித்துறை மீதான தாக்குதல் இது என்றும், குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை முறையாக விசாரிக்ககோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு பாடகி சின்மயி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து அதற்காக அனுமதி கோரியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்