மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக 3 நோயாளிகள் பலி- ஸ்டாலின் கொந்தளிப்பு

Report Print Basu in இந்தியா

மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையின் காரணமாக உயிர் காக்கும் எந்திரங்கள் செயல்படாமல் மூன்று நோயாளிகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அரசு மருத்துவமனையில் மூன்று போர் பலியானதற்கு அரசின் அலட்சியமே முழுக்காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது.

அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை! என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்