திருமணமான ஒரு மாதத்தில் வெளியான கணவரின் சுயரூபம்... அதிர்ச்சியில் உறைந்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 1 மாதத்தில் கணவரின் சுயரூபத்தை அறிந்த மனைவி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

மும்பையை சேர்ந்தவர் கிரண் ஷிண்டே. இவர் தான் பொலிஸ் அதிகாரி என கூறிவந்த நிலையில் கம்பீரமான பொலிஸ் உடையணிந்து பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்டு வந்தார்.

இதை பார்த்த இளம்பெண் ஒருவர், ஷிண்டேவுடன் நட்பானார்.

பின்னர் இருவரும் காதலித்த நிலையில் ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கணவர் உண்மையிலேயே பொலிஸ் அதிகாரி தானா என சில தினங்களாக ஷிண்டேவின் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் விசாரித்த போது ஷிண்டே பொலிஸ் அதிகாரி கிடையாது என்பதை அறிந்து அவர் மனைவி அதிர்ச்சியடைந்தார்.

மேலும் ஷிண்டே, வீட்டில் பணிபுரியும் காவலாளி என்பதையும் மனைவி கண்டுபிடித்தார். இது குறித்து பொலிசிடம் ஷிண்டே மனைவி புகார் அளித்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில் ஷிண்டே காவல் துறை அதிகாரி என போலியான அடையாள அட்டையை வைத்து பலரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து ஷிண்டேவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers