முன்பு 300 கிலோ... அறுவை சிகிச்சைக்குப் பின் 86 கிலோ: அமிதா அதிசயம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் புனேவை சேர்ந்த பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் 300 கிலோவிலிருந்து 86 கிலோவாக உடல் எடையை குறைந்துள்ளார்.

மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் அமிதா ரஜனி. சிறு வயதில் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாகத்தான் இருந்துள்ளார்.

ஆனால் தன்னுடைய 6-ஆவது வயதில் இருந்து உடல் எடை வேக வேகமாக அதிகரிப்பதை உணர்ந்துள்ளார்.

16 வயதில் மற்ற சிறுமிகள் போல் இல்லாமல் மிக அதிகமாக 126 கிலோ உடல் எடை உடையவராக இருந்துள்ளார் அமிதா.

உடல் எடை குறையுமா என்று எதிர்பார்த்த அவருக்கு மீண்டும் மீண்டும் எடை அதிகரித்துதான் சென்றுள்ளது.

ஒரு கட்டத்தில் தன் வேலைகளைக்கூட செய்ய முடியாமல் அமிதா மிகவும் சிரமப்பட்டுள்ளார். இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள பல மருத்துவமனைகளில் அவரைக் காண்பித்தபோதும், உடல் எடையை குறைக்க முடியவில்லை.

இதனிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அவரின் எடை அதிகரித்து 300 கிலோவாக அதிகரித்தது.

இதனையடுத்து புனேவை சேர்ந்த மருத்துவரான ஷாஷாங் ஷா, அமிதாவுக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதன்படி தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அமிதாவின் 300 கிலோ எடை வெறும் 86 கிலோவாக குறைந்தது. தற்போது அமிதா நலமுடன் உள்ளார். மருத்துவ உலகில் இது ஒரு சாதனையாகவும் கூட பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்