ஆசையாக பிரியாணி சாப்பிட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த கதி: எச்சரிக்கை விடும் செய்தி!

Report Print Vijay Amburore in இந்தியா

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசையாக பிரியாணி சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக உமா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ராகுல் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த உமா, நேற்றைக்கு முன்தினம் மதியம் பிரியாணி செய்து, சிறிது சாப்பிட்ட பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.

அன்று இரவு அதனை மீண்டும் சுட வைத்து சாப்பிட்ட உமா, திடீரென வாந்தியுடன், மயக்கமடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக உமாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers