காஞ்சனா 3 படத்திற்கு சென்ற ரசிகர்...பிணமாக வீடு திரும்பிய கோரம்: வெளியான அதிர்ச்சி காரணம்

Report Print Basu in இந்தியா

பெங்களுரில் காஞ்சனா 3 படம் பார்க்க சென்ற ரசிகர் திரையரங்கில் 10 ரூபாய்க்காக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்டின் டிவுன் பகுதியில் வசித்து வரும் 38 வயதான பரணி என்பவரே கொல்லப்பட்டுள்ளார். தினக்கூலி வேலை செய்யும் பரணி தினமும் பணி முடிந்து குடித்துவிட்டு இரவு படத்திற்கு செல்வதை பழக்கமாக கொண்டவர்.

சம்பவத்தன்று மாலை 5.30 மணிக்கு வாவண்யா திரையரங்கிற்கு காஞ்சனா 3 படம் பார்க்க தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் பரணி. திரையரங்கு பார்க்கிங்கில் வாகனத்தை விட்டுள்ளார். அப்போது, பார்க்கிங் ஊழியரான 50 வயதுடைய செல்வராஜ், பரணியிடம் பார்க்கிங் கட்டணமாக 10 ரூபாய் கேட்டுள்ளார். படம் முடிந்து போகும் போது தருவதாக பரணி கூறியுள்ளார்.

பரணி மது அருந்தியிருந்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகியுள்ளது. இதை கண்ட திரையரங்கு பராமரிப்பு ஊழியரான சேகர், செல்வராஜுடன் சேர்ந்து பரணியை மார்பு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பரணி மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், பரணியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரணியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவிதுள்ளனர்.

இதனையடுத்து, கொலை குற்றத்தின் கீழ் செல்வராஜ் மற்றும் சேகர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 10 ரூபாய்க்காக ஆரம்பித்த பிரச்சனை தற்போது கொலையில் வந்து முடிந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்