நள்ளிரவில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இளம்பெண்... அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனைவியை கொம்பால் பலமுறை அடித்து கொன்ற கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தின் கோத்தகுடம் நகரை சேர்ந்தவர் கண்டகுரி சிவா. இவர் மனைவி அருணா (30).

நேற்று நள்ளிரவு சிவாவுக்கும், அருணாவுக்கு சண்டை ஏற்பட்டது, அருணா நடத்தையில் சந்தேகப்பட்ட சிவா அவரை அடித்துள்ளார்.

இதையடுத்து என்னை ஏன் அடிக்கிறீர்கள் என அருணா சிவாவிடம் கேட்டார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த சிவா மனைவியின் தலையில் கொம்பால் பலமுறை அடித்த நிலையில் இரத்தம் கொட்டியது.

வலியால் துடித்த அருணா பயங்கரமாக கத்திய நிலையில் அவர் வீட்டருகில் இருந்தவர்கள் அங்கு வந்தார்கள்.

இதற்குள் சிவா அங்கிருந்த தப்பிய ஓடிய சூழலில் அருணாவின் உயிர் பிரிந்தது.

இது தொடர்பாக பொலிசுக்கு தகவல் தரப்பட்டதையடுத்து அங்கு வந்த பொலிசார் அருணா சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதன்பின்னர் தலைமறைவாக இருந்த சிவாவை கைது செய்தனர்.இது குறித்து பொலிசார் கூறுகையில், சில மாதமாகவே சிவாவுக்கும், அருணாவுக்கு சண்டை இருந்துள்ளது.

இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் இருவரிடமும் பேசி சமாதானம் செய்து வைத்தார்கள், ஆனாலும் மனைவியுடன் மீண்டும் சண்டை போட்டு அவரை கொலை செய்துள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்