உள்ளூரில் கண்டு கொள்ளாதப்படாத தமிழர்... கை கொடுத்த வெளிநாடு! அவர் செய்த சாதனை என்ன தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் முழுவதுமாக தண்ணீரிலேயே இயங்கும் இன்ஜின் ஒன்றை கண்டுபிடித்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோயம்புத்தூரை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் குமாரசாமி.

இவர் முழுவதுமாக தண்ணீரிலேயே இயங்கும் இன்ஜின் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அந்த இன்ஜின் ஹைட்ரஜனை எரிப்பொருளாகக் கொண்டு ஆக்சிஜனை வெளியேற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வகையில் இயங்குவது தான் இதன் சிறப்பு அம்சமாகும்.

இது குறித்து பேசிய குமாரசாமி, இந்த இயந்திரத்தை கண்டுபிடிக்க எனக்குப் பத்து ஆண்டுகள் ஆனது, இதை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவேண்டும் என நினைத்த நிலையில் இங்குள்ள நிறுவனங்கள் யாரும் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

பின்னர் என் திட்டத்தை ஜப்பான் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற போது உடனடியாக எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள்.

விரைவில் இது ஜப்பானில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாகும் என நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்