குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிறப்பு பரிசுகள்!

Report Print Arbin Arbin in இந்தியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதிக்கு அண்மையில் பிறந்த குழந்தைக்கு மகாராஷ்டிராவில் உள்ள டப்பாவாலாக்கள் நகைகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் திருமணத்திற்கு மும்பையில் உள்ள மதிய உணவு விநியோக தொழிலாளர்களான டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் இளவரசர் ஹரி - மேகன் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தைக்கு பரிசாக வழங்க டப்பாவாலா சங்கம் சார்பில் வெள்ளியால் ஆன கொலுசு, வளையல், இடுப்பு கொடி, செயின் மற்றும் தங்கத்தில் ஹனுமன் டாலர் உள்ளிட்டவை தெரிவு செய்யப்பட்டன.

இளவரசர் ஹரி - மேகன் தம்பதிகள் மும்பை சென்றிருந்த போதும் டப்பாவாலாக்களை சந்தித்து பேசியுள்ளனர்.

மட்டுமின்றி ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ் காலத்த‌லிருந்தே இந்த நட்பு தொடர்வதால் இதை சிறப்பிக்கும் வகையில் டப்பாவாலாக்கள் சங்கம் சார்பில் பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் அலுவலகங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று குறிப்பிட்ட அலுவலகங்களுக்குச் சென்று உரிய நேரத்தில் வழங்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள் டப்பாவாலாக்கள்.

வருடம் முழுவதும் இவர்கள் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்