ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவிற்கு 1600 கோடி நிவாரணம்! மாநில அரசு அறிவிப்பு

Report Print Kabilan in இந்தியா

ஃபானி புயல் பாதிப்பிற்கு ரூ.1,600 கோடி நிவாரண தொகையாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

கடந்த மே 3ஆம் திகதி ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த புயலின் தாக்குதலில் 43 பேர் பலியாகினர். அத்துடன் பயிர்கள், வாழை மரங்கள், காய்கறி விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஏராளமானவை சேதமடைந்தன.

ஃபானி புயலின் கோர தாக்குதலால் அம்மாநில மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புயல் பாதிப்புகளுக்கு ரூ.1,600 கோடி நிவாரணத் தொகையை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

விளை நிலங்களில் பயிர் செய்துள்ள ஒரு ஹேக்டர் நிலத்திற்கு ரூ.13,500 வழங்கப்படும் என்றும், அனைத்து வித வற்றாத பயிர்களுக்கு ஒரு ஹேக்டருக்கு ரூ.18,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயப் பயிர்களை முற்றிலும் இழந்தோருக்கு கூடுதலாக 22 சதவிதம் நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசு மற்றும் எருமை மாடுகள் வைத்திருந்தவர்களுக்கு ரூ.30 ஆயிரமும், கால்நடை வளர்ப்புகளுக்கு ரூ.25 ஆயிரமும், ஒரு ஆட்டிற்கு ரூ.3,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மேலும் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.12 ஆயிரமும், புயல் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்