மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட கணவன்

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்த போது மனைவியின் கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஜெபசீலன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரிஸ்டில்லா. இந்த தம்பதியினருக்கு ஷீபாராணி என்கிற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 10ம் திகதி தான் ஷீபாராணிக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் நேற்றைக்கு முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது.

ஒரு வாகனத்தில் உறவினர்கள் அனைவரையும் ஏற்றி அனுப்பிவிட்டு, ஜெபசீலன் தன்னுடைய மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கிளப்பியுள்ளார்.

அப்போது திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெபசீலன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் தடுக்க முயன்ற பிரிஸ்டில்லாவின் கைகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார் ஜெபசீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்கையில், கடந்த மாதம் வினோத் என்பவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதால், அதனை குழந்தைகள் நல அதிகாரிகளுடன் சென்று சென்று ஜெபசீலன் தடுத்து நிறுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதனால் வினோத் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers