வசமாக சிக்கிய மோடி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Basu in இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி நேர்காணலின் போது பொய் சொல்லிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலின் போது பேசிய மோடி, தான் 1987,1988-களிலே டிஜிட்டல் கமெரா மற்றும் இ-மெயில் பயன்படுத்தியாக தெரிவித்தார்.

இந்நிலையில், கோடக் நிறுவனம் 1995 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி அன்று அமெரிக்காவில் DC 40 என்ற முதல் நுகர்வோர் டிஜிட்டல் கமெராவை வெளியிட்டது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இந்தியாவில் பொது இணைய சேவையை வித்ஷ் சஞ்சார் நிகாம் லிமிடெட் (VSNL) அறிமுகப்படுத்தியது.

பின்னர் மோடி எப்படி 1987,1988-களிலே டிஜிட்டல் கமெரா மற்றும் இ-மெயிலை பயன்படுத்தியிருக்க முடியும். மோடி ஒரு பொய்யர் என நெட்டிசன்கள் பிரதமரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers