தந்தையால் பணத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண்... கும்பலிடம் சிக்கி சீரழிந்த கொடூரம்: கடைசியில் நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா
746Shares

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தீ காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் தந்தையுடன் குடியிருந்து வந்தவர் அந்த இளம்பெண்.

ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்த நிலையில், தந்தை மற்றும் அவரது உறவினர் ஒருவரால் 10,000 ரூபாய் பணத்திற்கு நபர் ஒருவருக்கு விற்கப்பட்டார்.

குறித்த இளம்பெண்ணை வாங்கிய நபர் இன்னொரு நபருக்கு கடன் பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அந்த நபரின் வீட்டு வேலைக்காக தாம் 10,000 பணத்திற்காக வாங்கிய இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் அந்த நபர் தமது நண்பர்களுடன் இணைந்து குறித்த இளம்பெண்ணை தொடர்ந்து பலமுறை கூட்டு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அவர் பொலிசாரை நாடி தமது நிலையை விளக்கி புகார் அளித்துள்ளார்.

ஆனால் பொலிசார் புகாருக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தமக்கு தாமே நெருப்பு வைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அவரை அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றுள்ள நிலையில்,

அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக ஹாப்பூர் பொலிசார் 14 பேர் மீது துஸ்பிரயோக வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்