கமலுக்கு ஆதரவாக களமிறங்கியது காங்கிரஸ்

Report Print Basu in இந்தியா

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார்.

பள்ளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமலின் இந்த கருத்திற்கு தமிழிசை, விவேக் ஓபராய், ராஜேந்திரபாலாஜி, உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கே.எஸ். அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னைியல் பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, இஸ்லாம் மதத்தில் இருக்கின்ற ஐ.எஸ் அமைப்பு போலத்தான், இந்து மதத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் என்பது. ஐ.எஸ் அமைப்பு இணையாகத்தான் ஆர்.எஸ்.எஸ் இருந்து வருகிறது.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அவரது கருத்தை நூறு சதவிகிதம் அல்ல, ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்