சாக்குமூட்டைகளில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட அழகிய பெண்ணின் சடலம்... பதறவைக்கும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சாக்குமூட்டையில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் நகரில் இரு தினங்களுக்கு முன்னர் வெவ்வேறு இடங்களில் சாக்குமூட்டைகளில் பெண்ணின் உடல் துண்டுதுண்டாக மீட்கப்பட்டது.

இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஸ்ரீமதி ஷெட்டி என தெரியவந்தது.

பொலிசார் தற்போது ஷெட்டியின் இருசக்கர வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

வாகனம் முழுவதும் ரத்தகறை இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

அந்த வாகனத்தை பயன்படுத்தியே கொலையாளி ஷெட்டியின் உடல்பாகங்களை தனித்தனியாக போட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

பொலிசார் கூறுகையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சுதீப் என்பவரை ஷெட்டி திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்னர் சுதீப்பின் நடத்தை பிடிக்காமல் அவரிடம் ஷெட்டி விவாகரத்து கோரினார்.

சம்பவம் தொடர்பாக சுதீப் மற்றும் 4 சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரித்து வருகிறோம்.

சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் வழக்கமாக காரில் தனது மின்சார பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு செல்லும் ஷெட்டி சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்துள்ளது.

வெகுவிரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers