கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

Report Print Kabilan in இந்தியா

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்தவொரு நபரையும் காயப்படுத்துவதையோ, கொலை செய்வதையோ அனுமதிக்காது.

அதனால் எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்