12ம் வகுப்பில் தோல்வி.. ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய நபர்.. புத்தகமான வெற்றிக்கதை

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் 12ம் வகுப்பில் தோல்வியடைந்த நபர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறியது குறித்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

மும்பையில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் சர்மாவின் வாழ்க்கையை பற்றிய புத்தகத்திற்கு 12ம் வகுப்பு தோல்வி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தை சர்மாவின் நண்பரும், துணை ஆணையருமான (விற்பனை வரி) அர்ருக் பதக் அடுத்த வாரம் வெளியிடுகிறார்.

பில்லான் கிராமத்தில் பிறந்து வளர்ந்த சர்மா கூறியதாவது, பள்ளிக்காலங்களில் மதிப்பெண்கள் குறித்து நான் கவலைப்பட்டதே கிடையாது. வகுப்பில் எடுக்கும் சதவீதம் மட்டுமே வாழ்கையில் வெற்றி படியாக அமையாது. நான் பத்தாம் வகுப்பை மூன்றாம் பிரிவில் முடித்தேன். 11ம் வகுப்பில் இரண்டாம் பிரிவு கிடைத்தது. 12ம் வகுப்பில் தோல்வியடைந்தேன்.

எனினும், 42 வயதான சர்மா, படிப்பை என் பயணத்தில் நான் ஒரு தடையாக பார்த்ததே இல்லை. நான் மேலே படிக்க வேண்டும் என்று நினைத்தேன், படித்தேன். இளநிலை, முதுநிலை முடித்து டாக்டர் பட்டம் பெற்றேன். யூபிஎஸ்சி தேர்வில் நான்காம் முறையே தேர்ச்சி பெற்றேன் இந்தியளவில் 121வது இடம் கிடைத்தது. மாணவர்கள் தோல்வியால் துவண்டு விடக்கூடாது, அதை தாண்டி நாம் வளர வேண்டும் என சர்மா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்