வெளிநாட்டில் வசிக்கும் கணவன்.. உள்ளூரில் தனது மனைவியை ஒருவர் அபகரித்துவிட்டதாக கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவன், மனைவியிடையில் ஏற்பட்ட பிரச்சனையை சமாதானம் செய்து வைத்த காவலர் மீது அந்த பெண்ணின் கணவரே புகார் கூறி வீடியோ பதிவிட்டு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போராட்டத்தின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக கேரளா மாநில அரசால் கவுரவிக்கப்பட்டவர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் அய்யர்.

கன்னியாக்குமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியில் போராட்டம் நடந்த போதே அதை மோகன் சிறப்பாக கையாண்டார்.

கன்னியாக்குமரியின் சூரியகோடு பகுதியைச் சேர்ந்த சோமன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

அவர் தனது மனைவியை மோகன் அபகரித்துக் கொண்டதாகவும், இருவருக்கும் தவறான தொடர்பு இருப்பதாகவும் கூறி வீடியோ ஒன்றை வெளிட இது குறித்து விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் சோமன் ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த போது குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இது குறித்து பொலிஸ் புகார் அளிக்கப்பட்ட நிலையில் மோகன், சோமனையும் அவர் மனைவியையும் விசாரித்தார்.

சோமனிடம் அறிவுரை கூறிய மோகன் இனி மனைவியை அடிக்கக் கூடாது என்று எச்சரித்தாராம். குடித்து விட்டு மனைவி குழந்தைகளை அடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் வெளிநாடு சென்ற சோமன், தன்னைப் பற்றி பொலிசில் புகார் அளித்த மனைவியையும், தன்னை எச்சரித்த சப் இன்ஸ்பெக்டர் மோகனையும் அசிங்கப்படுத்த நினைத்து அவதூறாக கள்ளத்தொடர்பு புகார் கூறி வீடியோ அனுப்பியுள்ளதாக கன்னியாகுமரி காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers