நடிகையை ஏமாற்றினாரா வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்? அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ் சினிமாவில் நடித்துள்ள நடிகையும் அவரின் 17 வயது மகளும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்குதல் செய்துள்ள நிலையில் அது தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையை அடுத்த சூரப்பேட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் அவர் தாய் ராதிகாவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பின்னர் ராதிகா கூறுகையில், என் இரண்டாவது கணவரான அமெரிக்காவில் வசிக்கும் ஜெயகரன் வாசுதேவன் தங்களுக்கு பலவகையில் தொல்லை கொடுப்பதாகக் கூறினார்.

இதோடு இந்த வழக்கை விசாரித்த அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மகள் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயகரன் போன் மூலம் கூறுகையில், நான் அமெரிக்காவில் கடந்த 22 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறேன். எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்தாகி விட்டது.

இந்தச் சூழ்நிலையில் தான் என் மீது பொய் புகார் கொடுத்த சிறுமியின் அம்மா ராதிகா அறிமுகமாகினார். நான் நடத்தும் ஐ.டி நிறுவனத்தின் கிளை சென்னையில் உள்ளது. அங்கு வேலை கேட்டு ராதிகா வந்தார்.

அவரிடம் வேலை இல்லை என்று கூறினேன். அப்போதுதான் ராதிகா, தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். கணவர், தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வறுமையில் வாழ்வதாகக் கூறினார். அவர் மீது பரிதாபப்பட்டு உதவிகளைச் செய்தேன். அப்போதுதான் ராதிகா, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். உடனே நான், எனக்கும் உங்களுக்கும் 11 வயது வித்தியாசம். இதனால் ஒத்துப்போகாது என்று கூறினேன்.

அப்படிப்பட்ட ராதிகாவின் பெண் குழந்தைக்கு நான் எப்படி பாலியல் தொல்லை கொடுப்பேன்.

ராதிகா ஒரு ஆயுதம்தான். அவருக்குப் பின்னால் ஒருவர் இருக்கிறார். ராதிகாவை அவரின் முதல் கணவரிடமிருந்து பிரித்த அந்த நபர், சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறியுள்ளார்.

ராதிகாவின் குடும்பச் சூழ்நிலையை கருதி அவருக்கு பண உதவிகளைச் செய்தேன். அதன்பிறகு என் மகனுக்கு ராதிகாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள் என நம்பினேன்.

அதன்பிறகு ராதிகாவை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன். அம்பத்தூரில் உள்ள என்னுடைய வீட்டில் அவர்களைத் தங்க வைத்தேன். அதன்பிறகுதான் ராதிகாவின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது.

சென்னை வந்த சமயத்தில் என்னுடைய பாஸ்போர்ட்டை திருடிய ராதிகா தரப்பினர், என்னை மிரட்டி திருமணம் செய்துவைத்தனர். அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது என கூறினார்

ராதிகாவின் வழக்கறிஞர் நரேஷ்குமார் கூறுகையில், ராதிகாவின் சொந்த ஊர் குஜராத். நடிகர் பரத் நடித்த ஒரு படத்திலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்

ராதிகாவுக்கும் ஜெயகரன் வாசுதேவனுக்கும் வடபழநி கோயிலில் திருமணம் நடந்ததற்காக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

ராதிகாவின் 17 வயது மகள் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் மாற்றப்பட்டுள்ளது.

புழல் காவல் நிலையத்தில் காலையிலிருந்து மாலை வரை ராதிகாவையும் அவரின் 17 வயது மகளையும் சட்டத்துக்கு விரோதமாக காவலில் பொலிசார் வைத்துள்ளனர்

நீதிமன்றத்தில் நீதிபதி முன், தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்ல ராதிகாவின் மகள் தயாராக உள்ளார்

ராதிகாவின் முதல் கணவர் மூலம் தொல்லை கொடுக்கின்றனர். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது உண்மைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers