சொந்த குடும்பத்தையே தீ வைத்து கொன்றுவிட்டு நாடகமாடிய அண்ணன்: மனைவியுடன் கைது

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் சொத்துக்காக சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞரை மனைவியுடன் சேர்த்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதியினருக்கு, கோவர்த்தனன், கவுதமன் என்கிற இரண்டு மகன்கள் இருந்தனர்.

கோவர்த்தனனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் முடிந்துவிட்டது. இளையமகன் கவுதமனுக்கு வரும் ஜூன் 6-ம் திகதி திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 14-ம் தேதி அன்று ராஜு, கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கவுதமன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென ஏசி வெடித்து சிதறியதில் மூன்று பேருமே உயிரிழந்துவிட்டதாகவும், அதனை பார்க்க சென்ற கோவர்த்தனனும் அவருடைய மனைவியும் மயங்கிய நிலையில் அறையில் கிடந்ததாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர், தன்னுடைய சகோதரி விபத்தில் இறக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று கோவர்த்தனன் சட்டையில் ரத்தக்கறை இருந்ததாகவும் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் கோவர்த்தனன் மற்றும் அவருடைய மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ராஜுவிற்கு சொத்து மதிப்பு அதிகம் இருப்பதால் கூலிப்படையை வைத்து கொலை செய்யப்பட்டனரா என்கிற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஏசியில் பழுது ஏற்பட்டு தான் தீ விபத்து ஏற்பட்டதா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஏசி பழுது நீக்கும் நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்