நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியில் வாக்குப்பதிவு

Report Print Abisha in இந்தியா

7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல், நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக இன்று இறுதிக்கட்ட வாக்குபதிவு நாள். மேலும், வாக்கு எண்ணிக்கை வரும் 23ஆம் திகதி நடைபெற உள்ளது.

இன்று, பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகளில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாஜகவிலிருந்து, காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நடிகர் சத்ருகன் சின்ஹா உட்பட 918 வேட்பாளர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள கர்கி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers