கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவி... தொட்டிலில் சிக்கிய சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி, தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த வடிவேல் - ஹேமா தம்பதியின் மகள் அஸ்வதி (11). பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அஸ்வதி, தனது பாட்டி ரமாவுடன் சென்னை ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் தனது மாமா வினோத்குமார் வீட்டுக்கு வந்து இருந்தாள்.

வினோத்குமாரின் மகன் யஷ்வந்துக்கு உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். மகனுக்கு துணையாக வினோத்குமாரின் மனைவி அங்கேயே உள்ளார். யஷ்வந்தை பார்க்க ரமா மருத்துவமனைக்கும், வினோத்குமார் வேலைக்கும் சென்று விட்டனர்.

வீட்டில் தனியாக இருந்த அஸ்வதி, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு வீட்டில் யஷ்வந்துக்கு கட்டி இருந்த தொட்டில் சேலையில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் சேலை, மாணவியின் கழுத்தை இறுக்கியதில் அஸ்வதி பரிதாபமாக இறந்தாள்.

தற்செயலாக வீட்டுக்கு வந்த அஸ்வதியின் சித்தப்பா ஈஸ்வரன், ஜன்னல் வழியாக இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers