86+8+1 = 97 இது திமுக தலைவர் ஸ்டாலின் போட்ட கணக்கு.. வைரலாகும் வீடியோ

Report Print Basu in இந்தியா

அரவக்குறிச்சி இடைத்தேர்ல் பிரச்சாத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட கணக்கு வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்ல் வாக்குப்பதிவு மே 19 இன்று நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மே 17ம் திகதி திமுக தலைவர் ஸ்டாலின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இன்று திமுக-வில் மொத்தம் 86 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி நமது கூட்டணி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் 1 சட்டமன்ற உறுப்பினர். எனவே 86+8+1 = 97 என ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார்.

86+8+1 = 95 வரும் நிலையில் ஸ்டாலின் போட்ட கணக்கின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்