உடல் முழுவதும் பணமாலையுடன் வந்த புதுமாப்பிள்ளை மற்றும் குடும்பத்தார்... வாய்ப்பிளந்த மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் வாய்ப்பிளந்தனர்.

இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி தொகுதியில் 8ஆவது வாக்குச் சாவடி மையத்துக்கு மணக்கோலத்தில் வந்தார் மணமகன். அவருடன் அவரது குடும்பத்தினரும் வந்தனர்.

மணமகன் உள்பட அனைவரும் பணமாலை அணிந்து கொண்டு வாக்களித்தனர். இதை அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

இன்னும் சிலரோ பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா அலப்பறை செய்வது என மனதிற்குள் கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட வைரலாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்