இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் 542 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் பிரபல ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவைகளை வெளியிட்டுள்ளனர். நடந்து முடிந்த 542 தொகுதிகளில் 272 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தக்கது

அதன் படி டைம்ஸ் நௌவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மொத்தம் 542 தொகுதிகளில் பாஜக 306 தொகுதிகளையும், காங்கிரஸ் 132 தொகுதிகளையும், மற்றவை 104 தொகுதிகளையும் கைப்பற்றும் என வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

சி-வோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக 287, காங்கிரஸ் 128, மற்றவை 127. சி-வோட்டர் கருத்துக்கணிப்புகளின் படி பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

ரிபப்ளிக் தொலைக்காட்சிய கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 305, காங்கிரஸ் கூட்டணி 124, மற்றவை 120. ரிபப்ளிக் கருத்துக்கணிப்புகளின் படியும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

டுடேஸ் சானக்யா கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 340, காங்கிரஸ் கூட்டணி 70, மற்றவை 133. டுடேஸ் சானக்யா கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும்.

என்டிடிவி கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 300, காங்கிரஸ் கூட்டணி 127, மற்றவை 115. என்டிடிவி கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரியவருகிறது.

நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 282 முதல் 290 கைப்பற்றும், காங்கிரஸ் கூட்டணி 118 முதல் 126 தொகுதிகளை கைப்பற்றும், மற்றவை 130 முதல் 138 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என வெளியிடப்பட்டுள்ளது. நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரியவருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்