மாணவர்களே இதை செய்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.. நடிகர் விவேக் கவலை

Report Print Basu in இந்தியா

தமிழ்நாடு கேப்டவுனை போல தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று நடிகர் விவேக் கவலை தெரிவித்துள்ளார்.

உலகில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகிறது. அதில் முக்கியமான நகரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் ஆகும்.

மனிதன் பயன்படுத்தும் ஏசி, குளிர்சாசனப்பொருட்கள் போன்றவற்றால் பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாகி பூமியின் வெப்பத்தை அதிகரித்து மழைப்பொழிவை தடுப்பதுதான் உலகில் உள்ள ஆறுகள் வற்றிப்போய் மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடக் காரணம்.

இந்நிலையில் நடிகர் விவேக் கொடைக்கானலில் செய்தியாளர்களுடம் கூறியதாவது : விடுமுறை தினங்களில் மற்றும் மாணவர் தன் பிறந்தநாளின் போது மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் ஏரிகுளங்களைத் தூர் வார வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரைப்போல் தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...