திருமணம் நிச்சயிக்கப்பட்ட தம்பி, தாய், தந்தையை கொலை செய்த அண்ணனின் பகீர் வாக்குமூலம்!

Report Print Vijay Amburore in இந்தியா

விழுப்புரம் மாவட்டத்தில் சொந்த குடும்பத்தையே தீ வைத்து எரித்த இளைஞர், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

திண்டிவனத்தில் கடந்த 14-ம் தேதி அன்று ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் உறங்கிக்கொண்டிருந்த, ராஜு, அவருடைய மனைவி கலைச்செல்வி மற்றும் இளைய மகன் கவுதமன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் விபத்து எனக்கருதியே பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று ராஜுவின் மூத்த மகனின் சட்டையில் இருந்த ரத்தக்கறை மற்றும் அறையில் இருந்து வந்த பெட்ரோல் வாசம் போன்றவை பொலிஸாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தன்னுடைய சகோதரி விபத்தில் இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என கலைச்செல்வியின் சகோதரர் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

ராஜுவிற்கு அதிக சொத்துக்கள் இருந்ததால், சொத்துக்களை அபகரிக்க கொலை செய்யப்பட்டாரா என்கிற, சந்தேகத்தின் பேரில் நேற்று ராஜுவின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, சிறுவயதில் இருந்தே என்னை விட என்னுடைய தம்பிக்கு தான் அதிக பாசம் கொடுத்தனர். 7 மாதங்களுக்கு முன் என்னுடைய திருமணத்தை எளிமையாக நடத்தினர்.

ஆனால் ஜூன் மாதம் நடக்கவிருந்த என்னுடைய தம்பியின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டனர்.

மேலும் என்னுடைய தம்பிக்கு அதிக சொத்துக்களை எழுதிக்கொடுக்க உள்ளதாகவும் என்னிடம் கூறினர். இதனால் ஆத்திரத்தில் அவர்களை தீர்த்து கட்ட முடிவெடுத்தேன்.

பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த அறையில் தூக்கியெறிந்தேன்.தீ பற்றி எரிந்துகொண்டிருந்த போது என்னுடைய தந்தை மட்டும் ஜன்னலை உடைத்துக்கொண்டு உதவி கேட்டார்.

உடனே பாட்டிலை வைத்து அவருடைய கழுத்தை அறுத்துக்கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers