மனைவிக்கு தெரியாமல் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட கணவன்.. உண்மை அறிந்து மனைவி செய்த செயல்

Report Print Raju Raju in இந்தியா

கணவரை திருநங்கை ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை திருநங்கையிடம் இருந்து மீட்டு தருமாறு மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயசண்முகநாதன். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் திருநங்கையான பபிதா ரோஸ், சமீபத்தில் தன் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அப்போது விஜயசண்முகநாதனுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, இரு மாதங்களாக காதலித்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

விஜயசண்முகநாதன், பபிதா ரோஸை திருமணம் செய்தது பற்றி, அவரது மனைவி சக்தியிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார்.

இது தொடர்பான உண்மை சமீபத்தில் சக்திக்கு தெரிந்துள்ளது.

இதையடுத்து ஏற்கனவே திருமணமான தனது கணவரை, மனைவியான நான் உயிருடன் இருக்கும்போதே மறுமணம் செய்துக்கொண்ட பபிதா ரோஸை கைது செய்து, தன் கணவரை தன்னிடம் மீட்டுக் கொடுக்கும் படி சக்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

சக்தி அளித்த புகார் ஏற்றுகொள்ளப்பட்டாலும் அதன் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்