வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தம்பதியின் சடலம்...அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தம்பதியின் அழுகிய சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார்.

இந்நிலையில் தம்பதி வசித்த வீட்டிலிருந்து சில நாட்களாக துர்நாற்றம் வீசிய நிலையில் அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இடத்துக்கு வந்து வீட்டை ஆய்வு செய்த பொலிசார் கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே சுப்பிரமணியனும், மீனாட்சியும் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர்.

பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இருவரும் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

பொலிசார் நடத்திய விசாரணையில் தம்பதிகள் இருவரும் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

மிக ஆடம்பரமாக வாழ்ந்த சுப்ரமணியனும், மீனாட்சியும் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.

மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் அக்கம் பக்கத்து வீட்டார் விசாரணையில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers