கல்லறைக்கு சென்று அடிக்கடி என் மகளை பார்ப்பேன்... எல்லா இடத்திலும் அவள் முகம் தெரிகிறது.. ஒரு தாயின் வலி

Report Print Raju Raju in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தன் அன்பு மகளை பறிகொடுத்த தாய் அடிக்கடி அவர் கல்லறைக்கு சென்று பார்த்துவருவதாக கூறியுள்ளது மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த முற்றுகைப் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இத்துயரச் சம்பவம் நடந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்தவர் மாணவி ஸ்னோலின்.

அவரின் பிரிவை தாங்க முடியாமல் தாய் வனிதா தவித்து வருகிறார்.

வனிதா கூறுகையில், வீட்டுக்குள்ள எங்கே பார்த்தாலும் ஸ்னோலின் முகம் தான் தெரிகிறது. தினமும் காலையில் எழுந்ததும் அவளோட பீரோவை திறந்துப் பார்ப்பேன்.

ஸ்னோவோட நினைப்பு வரும் போதெல்லாம், அவளோட போட்டோவப் பார்த்துக்கிட்டு இருப்பேன்.

தேடல் அதிகமானால் அவள் அப்பாவைக் அழைத்து கொண்டு கல்லறைக்குப் சென்று என் மகளைப் பார்த்துவிட்டு வருவேன்.

எனக்கு ஒவ்வொரு மாதம் 22-ம் திகதியும் என் மகள் இறந்த நாள் தான் நினைவுக்கு வருகிறது என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்