தினமும் செத்து பிழைக்கிறேன்.. உயிரோடு கொல்கின்றனர்... தற்கொலைக்கு முன் ரியல் எஸ்டேட் அதிபர் வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் தொழில் வீழ்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இறப்பதற்கு முன்னர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சென்னை போரூரை சேர்ந்தவர் சின்னராஜா (48). இவருக்கு ரீட்டா (46) என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஒரு காலத்தில் சின்னராஜா கொடிக்கட்டிப் பறந்தார்.

அவரின் மகன் 3 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் இறந்த நிலையில் கடந்தாண்டு மகளுக்கு விமரிசையாக திருமணம் செய்து வைத்தார் சின்னராஜா.

இந்நிலையில் சில ஆண்டுகளாக சின்னராஜாவின் ரியல் எஸ்டேட் தொழில் கடும் வீழ்த்தியடைந்தது.

இதனால் கடனாளியான அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் உடலை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

இறப்பதற்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோவில், காலி மனைக்குப் பஞ்சாயத்து அப்ரூவல் எப்போது நின்றதோ அப்போதே ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்தவர்கள் அத்தனைபேர் வாழ்க்கையும் வீணாகப் போய்விட்டது.

அதையும் மீறி அப்ரூவ் வாங்கப்போனால் அவனுக்கு மூன்று ரூபாய் கொடு இவனுக்கு 2 ரூபாய் கொடு, அவனுக்கு 5 ரூபாய் கொடு என்று சொல்லி எங்களை உயிரோடு கொல்கிறார்கள்.

இந்த ரியல் எஸ்டேட்டை 5, 6 ஆண்டுகாலமாக ஒழித்துக்கட்டிவிட்டார்கள் இந்த ஆட்சியில்.

படுத்தால் தூக்கம் வரவில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். நான் போய்த் தீரலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

இருக்கும் மற்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்காவது வாழ வழி செய்ய வேண்டும்.

என் குடும்பத்தை விட்டுச் செல்கிறேன் என்கிற கஷ்டம் இருக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தால் ஒவ்வொரு நாளும் செத்து செத்துப் பிழைக்க வேண்டி இருக்கும். நான் வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers