நாடாளுமன்ற தேர்தல்: வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது

Report Print Abisha in இந்தியா

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(23.05.2019) தொடங்கி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் மே மாதம் 19ஆம் திகதி வரை 7கட்டங்களாக நடைபெற்றது.

இதில், வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 435 தொகுதிகளிலும், காங்கிரஸ் 420 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது.

பிற தொகுதிகளில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு ஒதுக்கின. பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக 373 தொகுதிகளில் மோதின. பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி கம்யூனிஸ்டுகள் மாநில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 8,039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களில் சுமார் 63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் 39 நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் தொகுதியில் மட்டும் தற்காலிகமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும் காலியான சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிகையும் நடைபெற உள்ளது.

இதற்காக தமிழகத்தில் மற்றும்1.12 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்