நள்ளிரவில் பெற்ற குழந்தையை நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்.. ஏற்கனவே 2 குழந்தைகள் உயிரிழந்ததும் அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் பெற்ற குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் பொலிசில் அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் குஜ்ஜர் - தீபிகா குஜ்ஜர் தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இரவு தீபிகா தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் தன் மகனை தூக்கி கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி மூழ்கடித்தார்.

பிறகு மீண்டும் படுத்து உறங்கினார், பின்னர் இரவு 1.30 மணிக்கு சீதாராம் எழுந்து குழந்தையை தேடியுள்ளார். வீட்டில் இருந்த அனைவரும் காணாமல் போன சிறுவனைத் தேடியு நிலையில் அவர்களுடன் இணைந்து தீபிகாவும் மகனைத் தேடினார்.

இறுதியில், சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் இறந்த நிலையில் கிடப்பதை தீபிகாவின் மாமியார் கண்டுபிடித்தார்.

இதை அறிந்ததும் அனைவரும் கதறி அழவே, அவர்களுடன் தீபிகாவும் அழுதுள்ளார்

இது தொடர்பாக பொலிசார் குழந்தையின் குடும்பத்தாரிடம் விசாரித்த நிலையில் தீபிகா மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்ட தீபிகா, தூக்கத்தில் தனக்கே தெரியாமல் இப்படிச் செய்துவிட்டதாக கூறினார்.

இதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையில் தீபிகாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து பின்னர் உடல்நலக் கோளாறால் இறந்து விட்டதாகக் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers