அன்று நமக்காக உயிர் விட்ட தமிழ் மக்களை மறந்துட்டீங்களே... கண்ணீர் விட்டு கதறிய நம் உறவுகளை மறக்காதே தமிழா!

Report Print Santhan in இந்தியா

பொதுவாக எப்போதுமே மனிதர்களுக்கு ஒரு குணம் உண்டு என்று கூறுவார்கள். அதாவது ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தால், அதை உடனடியாக சமூகவலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரப்புவர்.

அது மிகவும் தீவிரமான பிரச்சனையாக இருந்தால், சில நேரங்களில் போராட்டத்தில் கூட ஈடுபடுவர். ஆனால் அதே சமயம் அதை மறக்கும் அளவிற்கு இன்னொரு பிரச்சனை வந்தால், முந்தையை பிரச்சனையை விட்டு விட்டு, இப்போது நடக்கும் சம்பவத்தை பற்றி பேசுவார்கள்.

அந்த பிரச்சனை அப்படியே தெரியாமல் போய்விடு. அப்படி ஒரு நாளை தான் இன்று பெரும்பாலான தமிழக மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூற வேண்டும்.

மே 22 கடந்த ஆண்டு, இதே தினம் தான் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஏனெனில் இந்த ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இதனால் பலரின் உயிர் போயிருப்பதாகவும் மக்கள் போர்க் கொடி உயர்த்தினர்.

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த போராட்டமாக இது மாறியதால், பொலிசார் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போது இது பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் அது நடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. மறந்துட்டீங்களே....

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்