அடுத்த 24 மணி நேரம் முக்கியம்: தொண்டர்களை எச்சரித்த காங்கிரஸ் தலைவர்

Report Print Arbin Arbin in இந்தியா

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கும் நிலையில், போலியான கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று கட்சி தொண்டர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அமையும் என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில், போலியான கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்று ட்விட்டர் மூலம் தன்னுடைய தொண்டர்களுக்கு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதில், “உங்களையும், காங்கிரஸ் கட்சியையும் நம்புங்கள். உங்களது கடின உழைப்பு வீணாகப் போகாது” என்று அதில் கூறியுள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொண்டர்களுக்கு ராகுல் அறிவுறுத்தியுள்ளார்.

எந்த அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் துணிவுடன் இருங்கள் எனவும் உண்மைக்காக போராடிய உங்கள் உழைப்பு வீணாகாது எனவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்