காட்டி கொடுத்த பாட்டி... கெஞ்சிய கணவன்! தவறான நட்பால் நடந்த விபரீத சம்பவத்தின் முழு பின்னணி

Report Print Santhan in இந்தியா
438Shares

தமிழகத்தில் தவறான நட்பால் மகனை காதலனுடன் சேர்ந்து தாய் அடித்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். வெல்டரான இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், கிஷோர் என்ற மூன்று வயது மகனும் உள்ளார்.

கணவன், மனைவிக்கிடையே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு புவனேஷ்வரி தன் மகனுடன் மாயமாகியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் பல இடங்களில் தேடியுள்ளார். அதன் பின் அவர் வேறு ஒருவருடன் இருக்கிறார் என்பதை அறிந்தவுடன் அமைதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் புவனேஷ்வரி திடீரென்று ஈரோட்டில் இருக்கும் தன்னுடைய தாய் புஷ்பாவை சில தினங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு கிஷோர் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டதாகவும், தான் திருவாரூக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மகள் மற்றும் பேரனை பார்ப்பதற்காக புஷ்பா காத்துக் கொண்டிந்த போது, புஷ்பாவிடம் கிஷோர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டு ஏற்றுக் கொள்ளாத புஷ்பா, அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் பொலிசாரோ சம்பவம் அம்பத்தூரில் நடந்ததால், அங்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். உடனடியாக புஷ்பா தன்னுடன் மகளையும் கார்த்திகேயன் என்ற நபரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின் என் பேரனை மகள் தான் கொலை செய்துவிட்டாள், இவள் தான் அவள் என்று கூற, பொலிசாரே சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், புவனேஸ்வரிக்கு, 16 வயதில் உறவினர் சோமசுந்தரத்துடன் திருமணம் நடந்துள்ளது.

சோமசுந்தரமிற்கு குடிப்பழக்கம் இருந்ததால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வரியின் அம்மா புஷ்பா, சமூக சேவகி என்பதால், அவர் சில ஆண்டுகளுக்கு முன் சென்னை போரூரில் நடந்த பெண்கள் மாநாட்டிற்கு புவனஸ்வரியை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனுடன் புவனேஸ்வரிக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே கணவரின் டார்ச்சர் காரணமாக மனவேதனையிலிருந்த புவனேஸ்வரிக்கு, கார்த்திகேயனின் அன்பாக பேச்சு பிடித்துப்போனது.

இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன், ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மகன் கிஷோருடன் புவனேஷ்வரி சென்றுள்ளார்.

சென்னை அம்பத்தூர், மேனாம்பேடு, வ.உ.சி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து புவனேஸ்வரியும் கிஷோரும் தங்கியுள்ளனர். அங்கு இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்துள்ளனர்.

ஆனால் மகன் கிஷோருக்கு அம்மா புவனேஷ்வரி கார்த்திகேயனுடன் இருப்பது பிடிக்கவில்லை. இதனால் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தா தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளான்.

இது புவனேஷ்வரிக்கு பிடிக்காமல் போக சம்பவ தினத்தன்று மகனை கரண்டியால் அடித்துள்ளார். அதன் பின் இருவரும் சேர்ந்து கிஷோரை அடித்ததில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

ஆனால் போகும் வழியிலே இறந்துவிடவே, அம்மாவிடம் கூறி உடலை எரிக்க திட்டம் திட்டியுள்ளனர். ஆனால் இறுதியில் மாட்டிக் கொண்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் முதல் கணவர் சோமசுந்தரம், மனைவியையும் குழந்தையையும் ஈரோட்டுக்கு வரும்படி அழைத்ததாகவும், ஆனால் அவர் முதல் கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் வாழ்ந்து வந்ததன் காரணமாகவே இந்த விபரீதம் நடந்துள்ளது.

இதையடுத்து, சோமசுந்தரம் குழந்தையை சட்டப்படி மீட்க நடவடிக்கை எடுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்