தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள பாஜக... வெற்றிக்கு பின் தொண்டர்கள் மத்தியில் மோடி பேசியது என்ன?

Report Print Santhan in இந்தியா

மத்தியில் தனிப்பெரும்பான்மையாக பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்திற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில், இது மக்களாட்சியின் மிகப்பெரிய நிகழ்வு என்றும் இந்தத் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாகக் கூறினார்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பாஜகவுக்கு இந்த வெற்றியை வழங்கியுள்ளதாகவும், மகாபாரதப் போர் முடிந்தபின் கிருஷ்ண பகவான் அளித்த பதிலையே இந்தத் தேர்தல் முடிந்தபின் இந்திய மக்களும் வழங்கியுள்ளனர்.

புதிய இந்தியாவை உருவாக்க மக்களிடம் வாக்கு கேட்டேன் என்று தொண்டர்களிடையே கூறிய அவர் தேர்தல் வெற்றியை மக்களுக்கு காணிக்கை ஆக்குவதாகக் கூறினார்.

கோடிக்கணக்கான மக்கள் பாரத் மாதா கீ ஜெய் என்று முழங்குகின்றனர். அனைவரும் இணைந்து இந்தியாவின் எதிர்காலத்தை நிர்மாணிக்க உழைப்போம். கூட்டாட்சித் தத்துவத்தை பேண மாநில அரசுகள் அனைத்துக்கும் உதவுவோம் என்று தனது உரையை முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்