பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து

Report Print Vijay Amburore in இந்தியா

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜக சார்பில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதலே எண்ணப்பட்டு வருகிறது.

மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருவதால், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே,மாலத்தீவு அதிபர் இம்ராஹிம் மொஹமத், போர்ச்சுக்கல் பிரதமர் அன்டானியோ கோஸ்தா, பூட்டான் பிரதமர் லொடாய் செரிங்ஸ், நேபாளம் பிரதமர் சர்மா ஒலி, தானன்சானிய அதிபர் ஜான் மெகுஃபுலி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வியட்நாம் பிரதமர் கூயுங் சுவாங் மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனாஸ்ட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்