நீண்ட போராட்டத்திற்கு பின் வெற்றியை வசமாக்கிய திருமாவளவன்: கொண்டாடும் இணையதளவாசிகள்

Report Print Vijay Amburore in இந்தியா

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்குப் பின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 542 மக்களவை தொகுதிகளில் 7 கட்டமாக நடைபெற்ற தேர்தல் கடந்த 19-ம் திகதியன்று முடிவுக்கு வந்தது.

இதில் பதிவான வாக்குகளில் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், 300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதியேற்க உள்ளார்.

நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் கூட. தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

தமிழகத்தல் தேனி தொகுதியை தவிர மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் சிதம்பரம் தொகுதியில் மட்டும் நீண்ட நேரமாக இழுபறி நீடித்து வந்தது. மேலும் வாக்கு எண்ணப்படும் பகுதியில் பொலிஸாரும் திடீரென குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2595 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்