சீமானின் நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா? அபார முன்னேற்றம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எத்தனை சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதிலும் ஏழு கட்டமாக நடந்த மக்களவை தேர்தலின், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இதில் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, பாஜக கூட்டணி பல இடங்களில் முன்னிலை பெற்று வந்தது.

அதன் படி இறுதியாக போட்டியிட்ட 538 தொகுதிகளில் 350-ல் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலராலும் கணிக்கப்பட்டது. அதன் படியே பல இடங்களில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

முன்பு இருந்ததை விட இப்போது சீமானின் நம் தமிழர் கட்சிக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

அந்த வகையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி சுமார் 15 லட்சம் வாக்குகள், அதாவது 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்