அடப் பாவிகளா இவனுக்கு போய் ஒரு லட்சம் ஓட்டு போட்ருக்கேங்களே... யார் அவர்? கிண்டல் செய்த பிரபல இயக்குனர்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட இயக்குனரான நவீன் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மே 26-ஆம் திகதி மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் மூடர்கூடம் படத்தின் இயக்குனருமான நவீன் நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ”அடப்பாவிகளா. அவனுக்கெல்லாம் ஒரு லட்சம் ஓட்டு போட்டிருக்கிங்களே. நோட்டாவுக்கு கீழ ஓட்டு வாங்கும்போதே அவென் அவ்ளோ பேசுவானே. இனி சும்மாவா இருப்பான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

முதலில் இவர் யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், அதன் பின் அவர் ஹெச்.ராஜாவைத் தான் குறிப்பிடுகிறார் என்று இணையவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் போட்டியிட ஹெச்.ராஜா ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்கியிருந்தார். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள அவர், இப்போது லட்சக்கணக்கில் ஓட்டு வாங்கியுள்ளதால், இனி சும்மாவா இருக்கப் போகிறார் என்றே குறிப்பிடும் வகையில் அவர் தெரிவித்துள்ளதாக இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றான்ர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்