தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவர் தான்: எவ்வளவு வித்தியாசம் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்து தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வந்த நிலையில் தமிழகத்தில் திமுக 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது.

அதிமுக ஒரு தொகுதியை கைப்பற்றியது.

இந்நிலையில் தமிழகத்திலேயே திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ப.வேலுச்சாமி 721776 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.காவின் ஜோதி முத்து 201267 வாக்குகள் வாங்கினார்.

இதையடுத்து 500000-த்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ப.வேலுச்சாமி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers