மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்ற மூன்று பெண்கள் இவர்கள் தான்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு 3 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவார்கள்.

தென் சென்னையில் திமுகவின் தமிழச்சி தங்கப்பாண்டியனும், தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியும், கரூரில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியும் வெற்றி பெற்றனர்.

இதில் தூத்துக்குடியில் வெற்றி பெற்ற கனிமொழியிடம் இருந்து ஸ்டெர்லைட் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வையும் மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அதே போல கரூரில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரத்தின் போதே கரூர் மக்களிடம் இருந்து ஜோதிமணி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

தென் சென்னையில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் அந்த தொகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையை ஏற்படுத்தவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த நிலையில் மக்கள் அதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers