தேர்தலில் படுதோல்வியடைந்த முதல்வரின் மகள்: அவருக்கு வாழ்த்து கூறிய பிரபல தமிழ்ப்பட நடிகர்

Report Print Raju Raju in இந்தியா

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் தோற்ற நிலையில் அவருக்கு நடிகர் ராகுல் தேவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பாக போட்டியிட்டார்.

அவரை பா.ஜ.க வேட்பாளர் அர்விந்த் தர்மபுரி 70,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இதையடுத்து கவிதா தனது டிவிட்டர் பக்கத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிஜாமாபாத் தொகுதிக்கு சேவையளிக்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி, இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்துக்கு வாழ்த்துக்கள் என கூறியிருந்தார்.

இதற்கு பதில் பதிவு செய்த வேதாளம், மழை, பரசுராம் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் ராகுல் தேவ், என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் இதற்கு நீங்கள் தகுதியானவர் தான் என குறிப்பிட்டார்.

தோல்வியடைந்த கவிதாவுக்கு ராகுல் வாழ்த்து கூறியதையடுத்து ஏன் இவ்வாறு கூறினீர்கள் என டுவிட்டரில் பலரும் அவரிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்