பலத்த தோல்விக்கு பின் நாம் தமிழர் காளியம்மாளின் நெகிழ்ச்சி பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் தமக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணியே 37 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும் இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் உயர்ந்திருப்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி நாம் தமிழர் கட்சி சார்பாக 50 சதவிகிதம் பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பளித்தது பலராலும் பாராட்டப்பட்டது.

இதில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் மொத்தம் 60,515 வாக்குகளை பெற்றுள்ளார்.

இது தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காளியம்மாள், முதலில், எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. உடன் நின்று உழைத்தவர்களுக்கும் நன்றி.

60,000 பேரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன் என்பதே பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதற்கு ஏற்றவாறு என் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த காளியம்மாள், மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கொண்டிருந்தவருக்கு நாம் தமிழர் கட்சியின் அறிமுகம் கிடைக்க, பின் அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்