தேர்தலில் நோட்ட வாக்குகள் குறைந்ததற்கு சீமான் காரணமா? வெளியான தகவல்

Report Print Santhan in இந்தியா

மக்களவை தேர்தலில் தமிழகத்தின் நோட்ட வாக்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு சீமானின் நம் தமிழர் மற்றும் கமலின் மக்கள் நீதி மய்யம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் நோட்டவிற்கு மட்டும் நாடு முழுவதிலும் 1.04 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நோட்டாவிற்கு மடும் 5,53,349 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இது கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வந்த எண்ணிக்கையை விட குறைவு, அந்த தேர்தலின் போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தேர்தலில், தமிழகத்தில் 6,04,050 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது.

இதை இரண்டையும் பார்க்கும் போது சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் குறைந்துள்ளது.

இந்த தேர்தலில், புதிதாக களமிறங்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் தான் நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் இந்த இரு கட்சிகளை தேர்வு செய்வதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இம்முறை அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குகளில்கூட நோட்டாவுக்கு சிலர் வாக்களித்திருந்தனர்.

தமிழகத்தில் இப்படி என்று வெளிமாநிலங்களில் பார்த்தால், பிகார் மாநிலத்தில் 2 சதவிகித வாக்குகளும், குறைந்தப்பட்சமாக சிக்கிமில் 0.65 சதவிகித வாக்குகளும் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers