பதவி விலகுவதாக முடிவு செய்துள்ளார் ராகுல் காந்தி... கமிட்டி கூட்டத்தில் கடிதம் வழங்கினார்

Report Print Abisha in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பின் ராகுல் பாதவி விலகி கொள்வதாக கூட்டத்தில் கடிதம் வழங்கி உள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம், வியூகங்களில் ஏற்பட்ட குறைபாடு, பிரச்சாரத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து ஆராய இன்று காங்கிரஸ் கட்சியின் கூட்டம் துவங்கி உள்ளது.

இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மொத்தம் 52இடங்களில் மட்டும் வெற்றி பெற்று எதிர்கட்சி என்ற அந்தஸ்தை பெற முடியாத நிலையை அடைந்துள்ளது.

நேரு குடும்பத்தின் சொந்த தொகுதி என்று எல்லோராலும் அழைக்கப்படும் அமேதி தொகுதியில் கூட இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது அனைத்து தொண்டர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலம், காங்கிரஸ் தோல்விக்கு பின் ராகுல் காந்தி தனது பதவியை ரஜினாமா செய்ய போவதாக பரவலாக ஒரு தகவல் நிலவி வந்தது. இந்நிலையில் பதவி விலகுவதாக கமிட்டி கூட்டத்தில் அவர் கடிதம் வழங்கி உள்ளார்.

அதை, மற்ற தலைவர்கள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அவரே பதவியில் தொடர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers